MYTHRAAN · படங்களில் கதைகள் · கிருஷ்ணர்

கண்ணன் கீதை உபதேசம் ஏன் செய்தார்?

குருக்ஷேத்திரத்தில் இரு படைகளும் நின்றன. அர்ஜுனன் தேரை நடுவில் நிறுத்தச் சொன்னார் — எதிரே கண்டது தன்னவரையே.

பாட்டன் பீஷ்மர், குரு துரோணர், உறவினர் — இவர்களைக் கொல்வதா? அர்ஜுனன் கைகள் நடுங்கின, காண்டீபம் நழுவியது. அமர்ந்தார்.

கண்ணன்: உனக்கு உரிமை செயலில், பலனில் அல்ல. ஆன்மா பிறப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை — உடல் போகும், அது போகாது.

அர்ஜுனனின் மயக்கம் நீங்கியது. சொன்னார்: நீர் சொல்வதையே செய்வேன். எழுந்து வில்லை எடுத்தார். அந்த உபதேசமே கீதை.

ஸ்ரீமத் பகவத் கீதை (மகாபாரதம், பீஷ்ம பர்வம்)

இதுபோன்ற மேலும் படக் கதைகள் செயலியில்

முழுப் படக் கதையைப் படியுங்கள் ›
டவுன்லோட் · Google Play